தமிழக பள்ளி கல்வித்துறை, ஜூனியர் ரெட் கிராஸ் தமிழ்நாடு சார்பில் ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர்களுக்கு மாநில அளவிலான கருத்தரங்கு ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) தலைமை வகித்தார். பள்ளி கல்வி இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம் (ராமநாதபுரம் ), ராமர் (பரமக்குடி) பாலதண்டாயுதபாணி ( மண்டபம்) ஆகியோர் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம்
மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் ரமேஷ் வரவேற்றார். ஜேஆர்சி துணைத் தலைவர் ஜெயக்குமார், சண்முக ராஜேஸ்வரன், அமைப்பாளர் ஜனார்தனன் ஆகியோர் வாழ்த்துரை பேசினர். நிர்வாக அலுவலர் சந்தான கிருஷ்ணன் விளக்கவுரை பேசினார். பொருளாளர் குழந்தைசாமி நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















