யோக கலையின் பெருமையை மாணவர்கள் அறியச் செய்யும் விதமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பாக செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம் மற்றும் யோகப் பயிற்சிநடைபெற்றது.
இந்த கருத்தரங்கினை தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் செய்யதம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலையில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் துவக்கி வைத்தார். யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஏ. வள்ளி விநாயகம் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் புரவலர் எம். உலகராஜ், தேவிபட்டினம் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் P. மகேஸ்வரி, ராமநாதபுரம் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். விஜயகுமார், கீழ்க்கரை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ். சுந்தரம், செய்யதம்மாள் பள்ளி யோகா ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியை ராமலெட்சுமி ஆகியோர் யோக கலையின் சிறப்புகளையும் மனம் மற்றும் உடல் வலிமை பெற யோக கலையின் அவசியத்தினையும் விவரித்தனர்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக செய்யதம்மாள் மெட்ரிக் மற்றும் CBSE பள்ளியின் மாணவர்களும் கல்லூரியின் YRC மாணவிகளும் யோக பயிற்சியில் ஈடுபட்டனர்.
கல்லூரியின் YRC திட்ட அலுவலர் பேராசிரியர் கே. ராஜ மகேந்திரன் நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் பள்ளியின் நிர்வாக அலுவலர்கள்ஷாகுல் ஹமீது மற்றும் சபியுல்லாஹ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















