இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கொள்கை விளக்க பயிற்சிப்பட்டறை..

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் (YRC) மாணவ மாணவியர்களுக்கு ரெட் கிராஸ் கொள்கைகள் விளக்கபயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

முதல்வர் முனைவர் இ. ரஜபுதீன் தலைமையில் கீழக்கரை ரெட் கிராஸ் புரவலர் T. முனியசங்கர் முன்னிலையில் கல்லூரி கூட்ட அரங்கில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் பயிற்சியை துவக்கி வைத்தார். யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். ஆனந்த் வரவேற்றார் கீழக்கரை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ். சுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினார்.

ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ரெட் கிராசின் வரலாறு, ரெட் கிராசின் ஏழு அடிப்படை கொள்கைகள் மற்றும் ரெட் கிராசின் கட்டமைப்பு ஆகியவை குறித்தும், மாவட்ட பொருளாளர் சி. குணசேகரன் இலவச அமரர் ஊர்தி சேவை இலவச தாய் சேய் நல ஊர்தி சேவை ஆகியவை குறித்தும் பவர் பாயிண்ட் மூலம் மாணவ மாணவிகளூக்கு விவரித்தனர்.

நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் என். சுலைமான் நன்றி கூறினார். யூத் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!