இராமநாதபுரம் செஞ்சிலுவை சங்கம் சார்பாக மரம் நடும் விழா..

இராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சக்கரக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மோகனதாஸ் தலைமை வகித்தார். ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ராக்லண்ட் மதுரம், பொருளாளர் குணசேகரன், புரவலர் தேவி உலகராஜ் ஆகியோர் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து பேசினர்.

கீழக்கரை தாலுகா ரெட்கிராஸ் செயலாளர் சுந்தரம், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளிநாயகம் , ஆயுட்கால உறுப்பினர் தமிழரசன், பசுமை ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கண்ணன், ஆயுட்கால உறுப்பினர் சதீஸ்குமார் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சகாயவள்ளி நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!