மதுரை மாவட்டம் எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கை உடைந்த நிலையில் நிர்வாண கோலத்தில் இருந்தார் இதைப்பார்த்த நாங்கள் உடனடியாக எங்களிடம் துணி ஏதும் கையில் இல்லாத காரணத்தினால் அந்த வழியாக வந்த ஐயப்ப பக்தர் பேருந்து ஒன்று நிறுத்தி அவர்களிடம் ஒரு காவி வேஷ்டி வாங்கி அணிவித்து பின் மதுரை ரெட் கிராஸ் ராஜ்குமார் அவர்களுக்கும் மற்றும் 108 வாகனத்துக்குள் தகவல் கொடுத்து பின் அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் வந்த மதுரை பெரியார் பேருந்து நிலையம் 108 வாகனம் மற்றும் ரெட்கிராஸ் ராஜ்குமார் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் பின் அவரை விசாரித்த பொழுது சென்னை புரசைவாக்கத்தில் சேர்ந்த பிச்சுமணி என்று சொன்னார்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்



You must be logged in to post a comment.