மதுரையில் ஆணி படுக்கையில் படுத்தவாறு 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து பொறியாளர் கின்னஸ் சாதனை.!!

மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் விஜய் நாராயணன், டேக்வாண்டோ மீதான ஈடுபாட்டால் தனது 23 வயதிலிருந்து தொடர்ந்து டேக்வாண்டோ கற்கத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து டேக்வாண்டோவில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளில் இதுவரை 29 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

அதில் தற்போது ஆணி படுக்கையில் படுத்தபடி உடலுக்கு மேற்புறம் ஆணி படுக்கையை வைத்துக் கொண்டு 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைக்கும் கின்னஸ் சாதனையை நாராயணன் படைத்துள்ளார்.

முந்தைய கின்னஸ் உலக சாதனையாக மூன்று நிமிடத்தில் 50 கான்கிரீட் பிளாக் கற்களை உடைத்ததே சாதனையாக இருந்த நிலையில், 3 நிமிடத்தில் 80 கான்கிரீட் கற்களை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளார் பொறியாளர் விஜய் நாராயணன். இதையடுத்து இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேக

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!