
அரசு பள்ளியில் தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை ஆசிரியர்கள் மாணவர்கள் கௌரவபடுத்தினர்.
தேசிய பத்திரிக்கையாளர் தினம் நாளை 16.11.2024 அன்று அனுசரிக்கப்படுகிறது., இந்த தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சியில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு கருந்தரங்கம் நடைபெற்றது.,இந்த கருத்தரங்கில் மதுரை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்க தலைவர் கதிரவன், டைம்ஸ் ஆப் இந்தியா உதவி ஆசிரியர் ஆரோக்கியராஜ், காந்திகிராம பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் பழனித்துரை மற்றும் உசிலம்பட்டி தாலுகா அளவிலான பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு எத்தனையோ செய்திகள் தரவுகளாக கிடைத்தாலும், நல்ல செய்திகளை மாணவர்கள் ஆராய்ந்து படிக்க வேண்டும் என மாணவர்களுடன் கலந்துரையாடினர்.,மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களையும் வாழ்த்தி, கேடயங்கள் வழங்கி பாராட்டினர்.,தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக பத்திரிக்கையாளர்களை கௌரவம் செய்தது எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது .உசிலை மோகன்
You must be logged in to post a comment.