நிலக்கோட்டை அருகே விவசாய சங்கத் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி விவசாயிகள் ஆர் .டி.ஓ.வை முற்றுகையிட்டு போராட்டம்  

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கிராமத்தில் குல்ல லக்குண்டு தொப்ப பக்குளம் கண்மாய் விவசாயிகள் சங்க தேர்தல் ஆர்டிஓ உஷா தலைமையில் நடைபெற்றது..          .

          .           .                  நிலக்கோட்டை பொதுப்பணித்துறை  செயற்பொறியாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். அப்போது இப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகளின் பெயர்கள் தற்போது வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறப்படுகிறது         இதனால் ஒரு தரப்பை சேர்ந்த விவசாயிகள் சங்கத் தேர்தல் பட்டியலில் ஏற்கனவே இருந்த விவசாயிகளின் பெயர்கள் இடம் பெறாததால் மோசடியான முறையில் ஒரு சில நபர்கள் பெயர் மட்டுமே பத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை ஏற்க மறுத்து தேர்தலை ஒத்திவைக்குமாறு கோஷமிட்டு திண்டுக்கல் ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்..   இதனால் அதிகாரிகள் முன்னிலையிலேயே இருதரப்பும் மோதிக் கொண்டனர். இதுகுறித்து உடனடியாக அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.                                     .                 இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி தலைமையில் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக தேர்தலை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று ஆர் .டி.ஓ. உஷா தேர்தலை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது                        . ..                 .:

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!