நாம் அன்றாடம் வங்கிகளில் பணம் எடுப்பது முதல் பல வகையான சேவைகளுக்கு முதியோர்கள் கடுமையான வெயிலிலும், குளிரிலும் வரிசையில் நிற்பதை காண முடியும். கடந்த வருடம் பண மதிப்பிழப்பு நடந்த பொழுது வரிசையில் நின்ற முதியவர்கள் உயிரிழந்த சம்பவங்களை தினம், தினம் நாளிதழ்களில் பார்த்ததை யாரும் மறந்திருக்க முடியாது. கீழக்கரையிலும் வடக்குத் தெருவைச் சார்ந்த முதியவர் ஒருவர் வரிசையில் நின்ற பொழுது உயிரிழந்த சம்பவம் நடந்தது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தோடு கீழக்கரை நுகர்வோர் சங்கம் மற்றும் கீழக்கரை நகர் நல இயக்கம் தலைவர் MMS.செய்யது இபுராஹிம், முதியோர்களின் நலன் காக்க இந்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு மனு அளித்திருந்தார். அவருடைய மனுவுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அனைத்து வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் நகலை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையின் படி இந்த வருடம் முதல் (2018) 70 வயதுக்கு மேலே உள்ள மூத்த குடிமகன்களுக்கு அனைத்து வகையான வங்கி சேவைகளையும் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்ற தெளிவான உத்தரவு உள்ளது. இந்த உத்தரவு நிச்சயமாக மூத்த குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான்.
91 வயதையும் கடந்து மக்கள் நலனுக்காக பாடுபடும் கீழக்கரை நகர் நல இயக்கம் தலைவர் MMS.செய்யது இபுராஹிம் பாராட்டுக்குரியவர் என்பதில் ஐயமில்லை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












Good information