பரமக்குடி அருகே ரேசன் அரிசி கடத்தியவர் கைது ! குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி நடவடிக்கை ! !

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே நயினார் கோவில் ஆர்.எஸ் மங்களம் சாலையில் காடடர்ந்தகுடியில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த கிஷோர் என்பவர் TN 72 BS 6979 பதிவெண் கொண்ட நான்கு சரக்கு வாகனத்தில் 23 மூட்டைகளில் 575 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. உடனே கடத்திய ரேசன் அரிசியையும் கடத்தலுக்கு பயன்படுத்திய தோஸ்த் வாகனத்தையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவல் பெற்று இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர். இராமநாதபுரம் சிவில் சப்ளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமாரசாமி மற்றும் தலைமை காவலர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!