திண்டுக்கல் அருகே சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது! 1500 கிலோ ரேஷன் அரிசி, சரக்குவேன் பறிமுதல்..
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல், வத்தலகுண்டுரோடு பைபாஸ் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது இதனை அடுத்து ரேஷன் அரிசி கடத்தி சென்ற குரும்பபட்டியை சரவணகுமார்(41) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









