இராஜபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் 36பஞ்சாயத்துகள் உள்ளன இதில் தற்போது 32 பஞ்சாயத்துக்களில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் பணிபாற்றிவருகின்றனர் .இன் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ஊராட்சி மன்ற செயலர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணி ஒத்துழாமையா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இவர்கள் எந்த ஒரு தகவல்களும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரிவிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தற்போது உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள இந்த நிலையில் எந்த பணிகளும் செய்ய முடியாமல் ஊராட்சிமன்ற தலைவர்கள் முடங்கி கிடப்பதாகவும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளை சந்தித்து புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர்.அப்பொழுது ஊராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரி இவர்களை உள்ளே விடாமல் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த 15-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து உடன்பாடு ஏற்பட்டது இதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.புகார் தெரிவிக்க வந்த எங்களை உள்ளே அனுப்பாத அதிகாரிகள் செய்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.

.செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!