தளவாய்புரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்.

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி கண்டித்து ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவர் நிர்வாகம் முறைகேடு செய்து வருவதாகவும், மேலும் தற்போது கொரோணா காலங்களில் நடமாடும் காய்கறி வண்டிகள் அப்பகுதியில் இயங்குவதற்கு 500 முதல் 1000 வரை வியாபாரிகளிடம் பணம் பெற்று வருவதாகவும், ஊராட்சி மன்றக் கூட்டத்தில் கணக்கு வழக்குகள் கேட்டாள் ஜாதி உட்புகுத்தி பேசி மிரட்டல் விடுப்பதாக கூறி ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 7 பேர் இன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும், விசாரணை நடத்தாமல் இதுவரை ஊராட்சி மன்ற தலைவரின் ஊழலுக்கு துணை போவதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!