இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்று நட்டு அறுசுவை விருந்தளித்த யூனியன் சேர்மன்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவ படத்திற்கு யூனியன் சேர்மன் சிங்கராஜ் மலர் தூவி மரியாதை செய்தார் இவருடன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் கலந்து கொண்டு மரியாதை செய்தார்

அதன் பின்பு இருவரும் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் .ஒன்றிய கவுன்சிலர்கள்மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்..

செய்தியாளர் வி காளமேகம்

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!