விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில்வே பீடர் சாலை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதாக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் (திமுக) தனது வாட்ஸ் ஆப் மூலம் .குறுச்செய்தி அனுப்பியுள்ளார். அதில் 3.6.2021 இராஜபாளையம் கிராமப்பகுதியில் செட்டியார்பட்டி, சேத்தூர், முத்துசாமிபுரம், மேலூர் துரைச்சாமியாபுரம், இராஜபாளையம் நகர் பகுதியில் 17 வது வார்டு சார்ச் தெரு, 22 வார்டு, ரயில்வே பீட்டர் ரோடு தனியார் திருமண மண்டபத்தில் 18 வயது முதல் 44 வயத்திற்க்கு உட்பட்டவர் களுக்கு தடுப்பூசி போட படுகிறது என்று தகவல் சட்ட மன்ற உறுப்பினர் வாட்ஸ் ஆப் பதிவு மூலம் பரப்பியதை அடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது .200 நபர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி
இருந்ததன் விளைவாக காலை 7 மணி முதல் வரிசையில் காத்திருக்கிறோம். ஆனால் தற்போது டோக்கன் வாழக்கியவர்களுக்கு மட்டும் தான், அதுவும் காமராஜர் நகர் பகுதிக்கு மட்டும் தான் என கூறியதால் பொதுமக்கள் கொந்தளிப்பு அடைந்தனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அவரது வாட்ஸ் அப்பில் இருந்து அந்த தகவலின் பேரிலேயே இவ்வளவு மக்களும் இங்கு கூடியிருக்கிறோம் அப்ப எங்களுக்கு டோக்கன் வாங்கினால் நாளை நாங்கள் போட்டுக் கொள்ளலாமா என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .சட்டமன்ற உறுப்பினர் தடுப்பூசி வந்தவுடன் அனைவருக்கும் போட ஏற்பாடு செய்கிறோம் என மக்களிடம் கூறி அங்கிருந்து நழுவி சென்றார். இதனால் ஆத்திரமடைந்த கூடியிருந்த பொதுமக்கள் தி மு க சட்டமன்ற உறுப்பினர முற்றுகையிட்டனர். பணியில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் பொதுமக்கள்தான் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூடியிருந்த கூட்டத்தை கலையை செய்தார்
.செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









