உத்தரபிரதேஷ், மீரட் நகரைச் சார்ந்த 25 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் லக்னோ – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரயில் பாதுகாப்பு பணியில் இருந்த கமல் சுக்லா (24 வயது) காவல் துறையைச் சார்ந்தவன் பயணம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து மானபங்கபடுத்தியுள்ளான். இச்சம்பவத்தின, பொழுது அந்த முஸ்லிம் பெண் நோன்பு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனே பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் எஸ்கார்ட் கான்ஸ்டபிள் கமல் சுக்லா கைது செய்யபப்ட்டுள்ளான்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி கேசவ் குமார் சவுத்ரி தெரிவிக்கையில்:
“பாதிக்கப்பட்ட பெண் சாதாரண ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ரமழான் நோன்பு வைத்திருந்தால் சாதாரண பெட்டியில் பயணம் செய்வது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால் ஆதலால் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணிக்க முயற்சித்துள்ளார். இதனை கவனித்த கமல் சுக்லா அவருக்கு உதவுவதாக கூறி சந்தப்பூர் ரெயில்வே ஸ்டேஷன் வந்ததும் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சிலரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். பிறகு அந்த ரயில் பெட்டியின் கதவை பூட்டிவிட்டு அந்த பெண்ணை கழிவறையில் வைத்து வன்புணர்வு செய்துள்ளார். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.உடனே பயணிகள் கான்ஸ்டபிளை பிடித்து ரெயில்வே காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்”என்று அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேச முதல்வராக பதவியேற்றது முதல் இது போன்ற பாலியல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லிம் மற்றும் தலித் மக்கள் மீது பாஸிச பயங்கரவாதிகள் குறி வைத்து தாக்குவது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









