ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக., சார்பில் தங்கக்கவசம் அணிவிக்கப்படும் என அதிமுக பொது செயலர் ஜெயலலிதா, கடந்த 2011 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இதன்படி அதிமுக., சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பில், 13.7 கிலோ தங்கக்கவசத்தை தேவர் சிலைக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2014 பிப்.9 ல் அணிவித்தார். இக்கவசம் தேவர் ஜெயந்தி விழா முடிந்ததும் அ.தி.மு.க., பொருளாளர் பெயரில் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்.28-30 வரை தேவர் ஜெயந்திக்கு நான்கு நாட்களுக்கு முன் வங்கியில் இருந்து பெறப்படும். இதன்படி மதுரை வங்கியில் இருந்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு, வங்கியிலிருந்து இன்று (23.10.2020) பெறப்பட்ட தங்க கவசம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், பசும்பொன் தேவர் நினைவிடம் கொண்டு வரப்பட்டது. வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில்
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன், என்.சதன் பிரபாகர், அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, சீர்மரபினர் நல வாரிய மாநில துணை தலைவர் முருகன், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் எஸ்.பி.காளிமுத்து (கமுதி), தர்மர் (முதுகுளத்தூர்), பசும்பொன் ஊராட்சி தலைவர் டி.ராமகிருஷ்ணன், பம்மனேந்தல் ஊராட்சி தலைவர் டி.சேகரன், முதல்நாடு ஊராட்சி தலைவர் காசி, கூட்டுறவு சங்க தலைவர்கள் கருமலையான் (திம்மநாதபுரம்), டி.நாகராஜ் (புத்துருத்தி), கர்ணன் (டி.புனவாசல்), கே.பி.என்.கருப்பசாமி (எம்.எம்.கோட்டை), மாவட்ட மாணவரணி துணை செயலர் பசும்பொன் தமிழ்வாணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பரிதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேலு, கமுதி வட்டாட்சியர் செண்பகலதா, பேரூராட்சி செயல் அலுவலர் இரா.இளவரசி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வி.தங்கப்பாண்டியன், அண்ணா துரை, கமுதி காவல் துணை கண்காணிப்பாளர் பிரசன்னா உட்பட பலர் பங்கேற்றனர்.


You must be logged in to post a comment.