கலங்கரை விளக்கத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க மத்திய அமைச்சருக்கு கடிதம் மூலம் சமூக ஆர்வலர் கோரிக்கை..

மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் அவர்களுக்கு .நான் தங்களை இந்த கடிதத்தின் வழியாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவு பாம்பன் பகுதியில் உலகப் புகழ்பெற்ற 100-ஆண்டுகள் கடந்த பழமையான இரயில் பாலமும் இந்தியாவின் மிக நீளமான கடற்கரை சாலை போக்குவரத்து பாலமும் உள்ளது. இந்தியாவின் காசி அடுத்து மிக முக்கிய கோவில் நகரம் ராமேஸ்வரம் மற்றும் மிக பிரபலமான சுற்றுலா நகரமும் ஆகும். பாம்பன் பகுதியில் ஆங்கிலேயர்களால் 1845- ஆம் ஆண்டு 20மீ நீளம் உள்ள உருளை வடிவ கலங்கரை விளக்கம் இங்கு உள்ளது. இவை 127- ஆண்டுகள் முன் கட்டப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான கலங்கரை விளக்கங்களில் ஒன்று. இந்தக் கலங்கரை விளக்கத்திலிருந்து பாம்பன் இரு போக்குவரத்து பாலங்களையும் கடலையும் தீவின் அழகையும் சுற்றுலா பயணிகளுக்கு பார்த்து ரசிப்பதற்கு மிக அழகாக இருக்கும். எனவே சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக. பாம்பன் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட சுற்றுலாத்துறை யாக அறிவித்து கலங்கரை விளக்கத்தை சென்று பார்வையிட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலாத்துறை மற்றும் இப்பகுதி மேம்படும் தாங்கள் மேன்மை கருதி இதற்காக ஆவணம் செய்யும்படி அனைத்து பொது மக்களின் சார்பாகவும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!