இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட கடல்நீரை நன்னீராக்கும் நிலையத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்ஆகியோர் குடிநீர் வினியோக திட்டப்பணிகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் ஆட்சியர்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.ஜெ.பிரவீன் குமார் ,ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), எஸ்.முருகேசன் (பரமக்குடி) ஆகியோர்உடன் இருந்தனர். நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது:
சாயல்குடி அருகே நரிப்பையூரில் கடந்த 1998-1999 ஆம் ஆண்டில் ரூ.40கோடி மதிப்பீட்டில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடலிலிருந்து உப்புத்தண்ணீரை 6 பில்டர்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, சராசரியாக 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவுகொண்ட நான்கு தொட்டிகளில் ஏற்றப்பட்டு, 600 குதிரை திறன் கொண்ட இரண்டு ராட்சத மோட்டர்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, நாள் ஒன்றிற்கு 38 எம்.எல்.டி குடி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் கடலாடி தாலுகா மட்டுமன்றி கமுதி, முதுகுளத்தூர், கீழக்கரை தாலுகாவைச் சேர்ந்த சுமார் 300கிராமங்களில் தடையின்றி தண்ணீர் கிடைத்து வந்தது. நாளடைவில் குழாய் மாற்றம், மோட்டர்பராமரிப்பு போன்ற காரணங்களால் 2008 ல் இத்திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீண்டும் புதுஉள்கட்டமைப்பு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த 10வருடங்களாக இத்திட்டம் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.நரிப்பையூர்கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முடங்கிகிடக்கும் நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி சீரான குடிநீர் வழங்கமுதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்றைய தினம் நேரில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால் கடந்த 2009 ஆம் ஆண்டில்ரூ.616 கோடி மதிப்பீட்டில் – ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம்ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் தடுத்திட உதவியது. இந்நிலையில் சிவகங்கைமாவட்டம் திருப்பத்தூர் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாககடந்த சில நாட்களாக காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது பழுதுசீரமைக்கப்பட்டு மீண்டும் சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாயல்குடி அருகே உள்ள குதிரைமொழி கிராமத்தில் 60 எம்.எல்.டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை 100சதவீதம் பூர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்:முன்னதாக அமைச்சர்கள், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டகீழத்தூவல், முதுகுளத்தூர், பேரையூர், கமுதி ஆகிய இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் குறித்துஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்





You must be logged in to post a comment.