இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி. ஆன்லைன் பாடங்களில் பங்கேற்க பெற்றோரிடம் செல்போன் வாங்கி கேட்டார். பெற்றோரிடம் பொருளாதார வசதி இல்லை. இதனால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய மாணவி தோழிகளுடன் வேலைக்கு கோவை செல்வதாக செல்போனில் தெரிவித்தார். இந்நிலையில் 35 நாட்கள் கழித்து உடல் மெலிந்த நிலையில் அந்த மாணவி மீண்டும் தனது வீடு திரும்பினார். உடல் நலம் கடுமையாக பாதித்த மாணவியை, சிகிச்சைக்காக பெற்றோர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியிடம் கடும் பாலியல் அத்துமீறல்கள் நடந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், கோபித்துக் கொண்டு வெளியேறிய மாணவி பரமக்குடி பேருந்து நிலையத்தில் நின்றார். பழ வியாபாரி நீலாவதி, செல்போன் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை ஆட்டோவில் அழைத்துச்சென்றார். கருணாநிதிபுரத்தில் உள்ள தனது வீட்டில் மாணவியை 35 நாள் அடைத்து வைத்து நீலாவதி, மேலும் இருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். சிறுமியின் உடல்நலம் கடுமையாக பாதித்ததால் அச்சமடைந்த அக்கும்பல், சிறுமியை பரமக்குடி பேருந்து நிலையத்தில் மீண்டும் கொண்டு வந்து விட்டுச் சென்றது தெரிய வந்தது. மாணவியின் பெற்றோரின் புகாரில், பரமக்குடி கருணாநிதிபுரம் தங்கம் மனைவி நீலாவதி 40, காளையார்கோவில் பாண்டி மனைவி மஞ்சுளா என்ற பஞ்சவர்ணம் 50, வேந்தோணி மீனாட்சி நகர் ஆட்டோ ஓட்டுநர் முனீஸ்வரன் 28 ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்


You must be logged in to post a comment.