பூட்டிக்கிடக்கும் ஏடிஎம், பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பணம் டெபாசிட் செய்யும் மிஷின் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை அச்சடிக்கும் பிரிண்டரும் பழுதாகி வேலை செய்யவில்லை .மேலும் பரம்பை ரோடு பூவாணிப்பேட்டை அருகில் உள்ள ஏ.டி.எம் மிஷினும் பணம் நிரப்பப்படாமல் பூட்டிக் கிடக்கிறது.வங்கியில் சென்று பணம் எடுக்கச் சென்றால், வங்கியின் பாதை மிகவும் குறுகலான பாதை அதில் கம்புகளை கட்டி மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக தடுப்புகளை அமைத்து வைத்துள்ளனர்.குறுகலான இடத்தில் ஒரு பகுதி ஏடிஎம் மெஷினுக்கு செல்லும் பாதையும் மறு பக்கத்தில் 6×4 அளவில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி வாடிக்கையாளர்களை ரோட்டில் அமர வைத்துள்ளனர்.அந்த சிறிய இடத்தில் தான் பொதுமக்கள் வங்கியில் பரிவர்த்தனை செய்வதற்காக காத்துக்கிடக்கின்றனர்.அந்த இடம் மிகவும் சிறிய இடம் என்பதால் பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோர்கள் போதிய இடமில்லாமல் ரோட்டில் நின்று அவதிப்படுகின்றனர்வாடிக்கையாளர்களை உள்ளே செல்ல ஒவ்வொருவராக அனுமதிக்கின்றனர்.இந்த குறுகிய இடத்தில் வங்கிக்கு அதிகப்படியான நபர்கள் வந்து காத்து கிடப்பதால் கூட்டம் அதிகமாக இருப்பதோடு கொரானா நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே பாரத ஸ்டேட் வங்கியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்றி வாடிக்கையாளர்களை வங்கியின் உள்ளே சென்று அமர்ந்து, தனிமனித இடைவெளியோடு பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கவும், மேலும் டெபாசிட் மெசின், ஏ.டி.எம் மற்றும் வங்கி புத்தகங்களை பிரிண்ட் செய்யும் பிரிண்டர்கள் பழுதானால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!