ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி எட்டிவயல் கிராமத்தில் இயற்கை விவசாயி முருகேசன் என்பவரது வயலில் தோட்டக்கலைத் துறை கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் ஊக்கத்தொகை, அங்கக முறை சாகுபடி திட்டங்களின் கீழ் வாழை, சப்போட்டா போன்ற பணப்பயிர்கள், கத்தரி, வெண்டை, கீரை உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிரிட்டு பராமரித்து வருகிறார். இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு பயிர் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். பண்ணைக்குட்டைகளில் சேமித்த மழை நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி, இயற்கை முறை சாகுபடியில் மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாக விவசாயி முருகேசன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்தார். தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ்.நாகராஜன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் புனித சுகன்யா, முத்து ராகேஷ், சுகன்யா, வட்டாட்சியர்கள் செந்தில்வேல், முருகவேல், வீரராஜா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


You must be logged in to post a comment.