தீவில் தஞ்சமடைந்த மீனவ பெண் உள்பட மீனவர் 3 பேர் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் லட்சுமணன் மனைவி கொங்கவேல் 31, சின்னபாலம், ஆண்டி மகன் சங்கர் 30, கண்ணன் மகன் சரவணன் 18 ஆகியோர்நாட்டுப்படகில் 29.11.2020ல் மீன்பிடிக்கச் சென்றனர். படகில் ஏற்பட்ட பழுதால் கரை திரும்ப இயலாமல் மனாலி தீவில் தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் இளம்வழுதி, மண்டபம் மீன்வளத் துறை உதவி இயக்குனர் அப்துல் நாசர் ஜெயிலானி ஆகியோர் அறிவுறுத்தல் படி இந்திய கடலோர காவல் படை ஹோவர் கிராப்ட் மூலம் மண்டபம் வனத்துறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் முன்னிலையில் மீனவர்கள் மீட்கப்பட்டு மண்டபம் அழைத்து வரப்பட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!