ராமநாதபுரம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து செவிலியர்கள் போராட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து செவிலியர்கள் இன்று (10.7.2020) காலை போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரானா வார்டு செவிலியர்களுக்கு 07.7.2020 ல் வழங்கிய ஒவ்வாத உணவால் செவிலியர் 5 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து 5 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.தரமான உணவு வழங்க வேண்டும் என நிர்வாகத்திடம் குரல் கொடுத்த ஆண் செவிலியர் இருவரை திருவாடானை, ராமேஸ்வரத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

உள்நோக்கமுடன் கூடிய பழிவாங்கும் போக்கை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். கொரானா வார்டு செவிலியர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதியளவு வழங்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும், உள்நோக்குடன் கூடிய பழிவாங்கும் செயலை விலக்கி கொள்ள வேண்டும், ஆண் செவிலியர் இருவரின் பணியிட மாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மருத்துவ பணிகள் பாதிக்கும் என உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களை உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தினர். தங்கள் கோரிக்கை ஏற்கும் வரை போராட்டத்தை செவிவியர்கள் தொடர்ந்ததால் பரபரப்பு நிலவியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!