உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் நாகாச்சி மக்களுக்கு அரிசி விநியோகம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழநாகாச்சி ஊராட்சியில் உள்ள 1,500 குடும்பங்களுக்கு உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் தமாகா., ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் வி.என். நாகேஸ்வரன், ராமநாதபுரம் ரோட்டரி சங்க செயலர் கே.காந்தி ஆகியோர் தலா ரூ.1.5 லட்சம், ஜெகன் சுரேஷ் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெ. தினேஷ்பாபு, ஜெ. சுகுமார் ரூ.1 லட்சம் என ரூ.4 லட்சம் மதிப்பில் அரிசி 3 கட்டமாக தலா 500 குடும்பங்களுக்கு கொரானா நிவாரணமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. நிறைவு நாள் நிகழ்வு கல்கிணற்றுவலசை கலையரங்கில் நடந்தது. நிறைவு நாள் நிகழ்வு கல்கிணற்றுவலசை கலையரங்கில் இன்று நடந்தது. நாகாச்சி ஊராட்சி தலைவர் ராணி கணேசன் தலைமை வகித்தார்.ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆறுமுக பாண்டியன், ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி (மாவட்ட கவுன்சிலர்), ஜெகன் சுரேஷ் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெ.தினேஷ் பாபு (பட்டயத் தலைவர் இசிஆர் ரோட்டரி சங்கம், ராமநாதபுரம்),ஜெ.சுகுமார், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள்,துணை வட்டாட்சியர் சாமிநாதன், உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் வி.என். நாகேஸ்வரன் (தமாகா., ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர்) உச்சிப்புளி ரோட்டரி சங்க தலைவர் எஸ்.ஏ. அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றிய 500 பயனாளிகளுக்கு அரிசி விநியோகத்தை ராமநாதபுரம் வட்டாட்சியர் வி.முருகவேல் தொடங்கி வைத்தார். இதில் உச்சிப்புளி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஜெயபாலன், வழக்கறிஞர் செந்தில் குமார், முன்னாள் செயலர்கள் கண்ணன், பாலகிருஷ்ணன், பிஸியோதெரபி டாக்டர் தாமரைச்செல்வன், தலைவர் தேர்வு ராஜேஸ்வரன் செயலர் தேர்வு வெள்ளைச்சாமி, ஊராட்சி துணை தலைவர் கவிதா, ஊராட்சி உறுப்பினர்கள் முத்துலட்சுமி, கோட்டை மற்றும் சிவகுமார், கருணை குமார், சேகர், நாகாச்சி சத்தீஸ்வரன் சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!