பெருங்குளத்தில் 31ஆம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி: ஆற்றாங்கரை அணி ஜாம்பியன்

இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் இத்திஹாத்துல் நவ்ஜஹான் முஸ்லிம் சங்கம் (ஐஎன்எம்எஸ்) சார்பில் 31 ஆம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி பெருங்குளம் கால்பந்தாட்ட மைதானத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கியது. இதில் சிவகங்கை, கோட்டைபட்டினம், கானாடுகாத்தான்,கழனிவாசல்,இளையான்குடி, பண்ணக்கரை, கீழக்கரை,பெரியபட்டணம், சாத்தான்குளம், மண்டபம், முனியன் வலசை, முதுனாள், , பெருங்குளம், , சித்தார்கோட்டை, சின்னக்கடை,காரிக் கூட்டம், , குப்பன்வலசை, புதுமடம், ஆற்றாங்கரை, குலசேகரக்கால், தேரிருவேலி, இருமேனி மற்றும் பெருங்குளம் உள்பட 28 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் ஆற்றாங்கரை அல்-உமர், ராமநாதபுரம் சேதுபதி மெமோரியல்ஸ் அணிகள் மோதின. ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தன. பெனால்ட்டி கார்னர் என்ற முறையில் 4:3 என்ற கோல் கணக்கில் ஆற்றாங்கரை அல்-உமர் அணி ஜாம்பியன் கோப்பையை வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பெருங்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் ம.இ.அ.மு.அப்துல் நாபிஃ ஊ தலைமை வகித்தார். பெருங்குளம் முஸ்லிம் ஜமாத் கவுரவத் தலைவர் தா. சாகுல்ஹமீது வரவேற்றார்.பெருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ஜி.சிவக்குமார், ஆற்றாங்கரை ஊராட்சி மன்றத் தலைவர் முகமது அலி ஜின்னா, குயவன் குடி ஊராட்சி மன்றத் தலைவர் குப்பை கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நான்கு இடம் பிடித்த ஆற்றாங்கரை அல்-உமர், ராமநாதபுரம் சேதுபதி மெமோரியல்ஸ், முனியன் வலசை, பண்ணக்கரை அணிகளுக்கு பரிசு கோப்பை, தனி நபர் கேடயம் ரொக்கத் தொகை வழங்கப்பட்டது. பெருங்குளம் அணி வீரர் சல்மான் சிறந்த ஆட்டக்காரருக்கான தனி நபர் கோப்பை, பெரியபட்டிணம் வீரர் மஜூத் சிறந்த கோல் கீப்பருக்கான தனி நபர் கோப்பையை தட்டிச்சென்றனர். போட்டி சிறக்க சிறப்பாக பணியாற்றிய அணி நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.நிர்வாகிகள் அப்துல் நாசர், ஷேக் ராஜா, அன்பு, இஸ்மாயில் கனி, பெருங்குளம் மேற்கு தெரு தலைவர் கருப்பையா, கிழக்கு தெரு தலைவர் நாகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் அறிவுறுத்தல் படி, உச்சிப்புளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!