இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் திருக்கல்யாணம்..

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்டதும், நிர்வாகத்திற்குட்பட்டதுமான இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் 1428ம் ஆண்டு பசலி ஆனி பிரமோற்சவ 6ம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இதை முன்னிட்டு நேற்றிரவு (/8/07/2018) மாலை 5 மணி அளவில் யானை வாகனத்தில் ஸ்ரீராமர் ரத வீதியில் வலம் வந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மாலை 6 மணியளவில் துவங்கிய திருக்கல்யாணம் இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஜூலை 21 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!