ராமநாதபுரத்தில் பண மோசடி எஸ் பி யிடம் மனு !

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல் கிணற்று வலசை பகுதியில் சேர்ந்தவர்கள் உறவினர் தானே என நம்பி கட்டிய குலுக்கள் சீட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவான பெண் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு பெண்கள் கண்ணீர் மல்க  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு  அளித்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் தனது உறவுக்கார பெண்ணான உச்சிப்புளியை சேர்ந்த மங்கையர்கரசி என்பவரிடம் மாத குலுக்கள் சீட்டுக்கு பணம் கட்டி வந்ததாகவும் மாதம் 10,000 விதம் 21 மாதங்களுக்கு மேலாக கட்டியுள்ளனர் ஆனால் தற்போது வரை குலுக்கலில் இவர்களது பெயர் வரவில்லை என மங்களேஸ்வரி  கூறியதாக தெரிகிறது ..இந்த நிலையில் திடீரென மங்களேஸ்வரி தனது வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்தோடு  தலைமறைவாகி விட்டதால் விசாரித்து பார்த்தபோது பலரது பேரில் விழுந்த குலுக்கல் சீட்டு பணத்தை இவர்களுக்கு தராமல் ஏமாற்றி பல லட்ச ரூபாயை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டதாகவும் தலைமறைவான மங்களேஸ்வரி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டவர்களை கண்டுபிடித்து தங்களிடமிருந்து மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!