இராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டியின் 2019 – 20 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. புதிய தலைவராக அருணகிரி, செயலாளராக சுப்ரமணி பதவியேற்றனர். ஆதரவற்ற காப்பகத்திற்கு அரிசி, சலவைத் தொழிலாளிக்கு இஸ்திரி பெட்டி, அங்கன்வாடி மையங்களுக்கு பிளாஸ்டிக் சேர், ஏழை பெண்களுக்கு சேலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு பாலிசி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், முன்னாள் ரோட்டரி கவர்னர் சின்னத்துரை அப்துல்லா , உதவி கவர்னர் சோ.பா ரெங்கநாதன், ரோட்டரி பட்டயத்தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தினேஷ் பாபு , கோரல் சிட்டி சங்க முன்னாள் தலைவர் லோகநாதன், முன்னாள் செயலாளர் ராஜா கலந்து கொண்டனர். கோரல் சிட்டி சங்க துணைத் தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் கார்த்திகேயன், இணைச் செயலாளர் பழனி முருகன், டாக்டர் காளிமுத்து, பொறியாளர் ராஜேஷ், குணசேகரன், மருதுபாண்டியன் சாத்தான்குளம் ஜ மாத் தலைவர் காபத்துல்லா, பொறியாளர் மாரி, ஷபி அஹமது, மோகன், சம்பத் ராஜா, பாரதி, கவிதா, ராதிகா, செல்வநாயகி, கணேசன், முருகன், ஜெய கார்த்தி கேயன், அபுபக்கர், பூசைத்துரை கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









