இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சக்திவேல், கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ், ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பட்டு ராஜா, அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஷ்ணு, கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தங்கேஸ்வரன் ஆகியோருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.







You must be logged in to post a comment.