“வெற்றி கனி”யை பறித்த இராமநாதபுர பாராளுமன்ற உறுப்பினர் “நவாஸ் கனி”…

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என பல்வேறு சமூக மக்கள் சரிசமமாக வாழ்ந்து வரும் பகுதியாகும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தோழமை கட்சியான முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கியபோது, இத்தொகுதியில் கடுமையான போட்டி நிலவும், பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ளது, சமுதாய ஓட்டுக்கள் பிரிய வாய்ப்புள்ளது என்று கூறிய நிலையில் லட்ச கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வென்று வெற்றி வாகை சூட்டியுள்ளார்.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் உழைத்து வாழ்வில் உயர்ந்தவர், அரசியல் பின்புலம் இல்லாமல் உயர்ந்தவர் ஆகையால்  சாமானிய மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வார் என்ற மக்களின் எதிர்பார்ப்புதான்.  அதையும் தாண்டி நவாஸ் கனி ஏணி சின்னத்தினால் மட்டும் வெற்றி பெற்றார் என்று கூறி எளிதாக கடந்து விட முடியாது.  இந்த வெற்றிக்கு முக்கியமாக வலுவான கூட்டணி, அதையும் தாண்டி இயக்க சித்தாந்தங்களையும், வேற்றுமைகளையும் மறந்து ஓட்டளித்த பல்வேறு இயக்க மக்கள் என்பதை இத்தருணத்தில் மறுத்துவிட முடியாது.

நவாஸ் கனியின் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று கீழக்கரை, இராமநாதபுரம், பெரியபட்டிணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வெடி வெடித்து கொண்டாடினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!