ராமநாதபுரத்தில் திமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் !

ராமநாதபுரம் கேனிக்கரை அருகே தனியார் மஹாலில் திமுக சார்பில் அனைத்து கட்சிகளையும் அழைத்து இந்தியா கூட்டணியில்  ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி  அறிமுகம் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில்  நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள  அனைத்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இதில் சென்ற பாராளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு  அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!