இராமநாதபுரம் பாரதி நகரில் ஸ்டாலின் கைதை கண்டித்து சாலைமறியல்! – நூற்றுக்கணக்கானோர் கைது!

இராமநாதபுரம் பாரதிநகரில் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மண்டபம்      மேற்கு ஒன்றிய தி.மு.கழகத்தின் சார்பில்    மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர்  கனகராஜன் தலைமையில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில்    ஈடுபட்டனர்.
இதில் தகவல் தொழில் நுட்ப மாவட்ட துணை அமைப்பாளர் பிரவின், ஒன்றிய துணை செயலாளர் கோபால், பட்டணம்காத்தான் ஊராட்சி  அவைத்தலைவர் சாத்தையா, வழுதூர் செயலாளர் கார்மேகம், விவசாய அணி துணை அமைப்பாளர் சரவணன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சேதுராமலிங்கம், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், மாணவரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் அஷ்ரப் அலி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் எபனேசர், ஒன்றிய பிரதிநிதிகள் லோகநாதன், கார்த்திக், சுபுகான் உள்ளிட்ட ஏராளமானோர்      கலந்து கொண்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டம் செய்த அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மகாலில் அடைத்து பின்பு விடுவித்தனர். இதே போல் இராமநாதபுரம் நகர் திமுக சார்பில் நகர் செயலாளர் கார்மேகம் தலைமையில் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் பங்கேற்று கைதாகினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!