ராமநாதபுரம் வ.உ.சி நகர் கணிக்கர் தெருவைச் சேர்ந்த முத்து மனைவி ராஜாத்தி (55). இவர் கடந்தாண்டு ஜன.26 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது மகன்கள் ரவி ராவுஜி, ஹரி ராவுஜி, சுதன் ராவுஜி ஆகிய 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். ராஜாத்தி தனது பிள்ளைகளுடன் சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். ராஜாத்தியின் மூன்று மகன்களும் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்கின்றனர். இவர்கள் தாயின் நினைவாகவும், தாய் இந்த இவ்வுலகில் எவ்வளவு முக்கியமானவர் என்பதை மற்றவர்களும் உணரும் வகையில் அவர்கள் வசிக்கும் கணிக்கர் தெருவில் புதிய வீடு கட்டி, வீட்டின் முன் தாயார் ராஜாத்தியின் முழு உருவத்தில் ஃபைபர் சிலையுடன் கூடிய மணிமண்டத்தை மகன்கள் மூவரும் சேர்ந்து கட்டியுள்ளனர்.
இதன் திறப்பு விழாவை அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், மகன்கள் மற்றும் குடும்பத்தினர், அவரது சமூகத்தினர் சேர்ந்து நடத்தினர். இந்நிகழ்வில் சில அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.




You must be logged in to post a comment.