ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு ! சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை !!

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் செய்தியின் வாயிலாக தெரிவிக்கையில் :- சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. இதுசம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை உதவிக்கு 8300031100 Hello Police 100 என்ற எண்னை உதவிக்கு அழைக்கலாம் என்றும் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம் என்று தெரிவித்தார. மேலும் தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம் என்றும் அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!