தூய்மைப்பணியாளர்களுக்கு வாரம் 1 நாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க கோரிக்கை: வாரியத் தலைவர் ஆறுச்சாமி தகவல்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தாட்கோ மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம் சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பேசியதாவது:
தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு பெயர்கள் இருந்து வந்த நிலையை கண்டு
கடந்த 2007-ஆம் ஆண்டு தூய்மை பணியாளர் என பெயர் மாற்றம் செய்து தூய்மை பணியாளர்களுக்கு சமுதாயத்தில் அங்கீகார சொல்லை தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்து தலைவர், உறுப்பினர்கள் நியமித்து தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். தூய்மை பணியாளர்கள் நல வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகள் போக ரூ.40 கோடி தற்போது இருப்பில் உள்ளது. இந்த வாரிய பணியாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால் ரூ.25,000, மரணம் ஏற்பட்டால் ரூ.5 லட்சம் நிவாரண உதவித் தொகை
தற்பொழுது
வழங்கப்பட்டு வருகிறது. இதில் விபத்து நிவாரணமாக ரூ.50,000, மரணம் அடைந்தவர் குடும்பத்திற்கு ரூ. 8 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டி தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்க உள்ளோம். தூய்மை பணியாளர் நல வாரியத்தில் 3 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டல் படி 10 லட்சம் பேர் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தூய்மை பணியாளர்களை தெரிவித்த ஊதிய உயர்வு,
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஊதியம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய துறை அலுவலர்களுக்கு தெரிவித்து
ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் துறை நல அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு பணிக்குத் தேவையான உபகரணங்கள் தேவையான காலகட்டத்தில் வழங்கும் வேண்டுமென வலியுறுத்தியதை கருத்தில் கொண்டு பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு
நலவாரியம் மூலம்
கொண்டு சென்று வாரம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க கோரிக்கை முன் வைக்கப்படும். மாவட்டந்தோறும் தற்பொழுது தூய்மை பணியாளர்களை சந்தித்து கோரிக்கை குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரை தூய்மைப் பணியாளர் நலவாரிய ஆணைய உறுப்பினருடன் சந்தித்து தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக உள்ள அரசாணை -62 ஐ அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விபத்துகள் ஏற்படும் நிலையை கருதி
கழிவு நீர் தொட்டி தூய்மைப்படுத்தும் பணிக்கு பணிக்காலங்களில்செல்ல வேண்டாம். இப்பணிக்கு ஒரு சில மாவட்டங்களில் ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க ரூ.30 லட்சம் வரை
தமிழ்நாடு முதலமைச்சர்
வழங்குகிறார். இது மட்டுமின்றி அரசால் எண்ணற்ற திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு 4.37 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று ரூ.45,500/-க்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்தார்.
10 பயனாளிகளுக்கு ரூ.45,500 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தூய்மை பணியாளர்களுடன் தலைவர் ஆறுச்சாமி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.தாட்கோ மேலாளர் விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் செல்வி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.