திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமரிசையாக நடந்தது.!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களகுடியை அடுத்துள்ள கஸ்பார்நகர் புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமர்சியாக நடந்தது.
இந்த ஆலயத்திற்கு திருப்பலி மற்றும் சப்பரபவனியானது கடந்த பிப் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடைசி நாளான இன்று புனித லூர்து அன்னை ஆலயம் சிறப்பு சொரூபம் பல்லக்கில் எழுந்தருளி அதனை இறை மக்கள் கூட்டத்துடன் குருந்தங்குடி விலக்கு சாலை வரை சுற்றி சப்பரபவனி நடை பெற்றது.
அதற்கு முன்னதாக, இறையாளர்கள் சிறப்பு திருப்பலியை செய்து வைத்தனர். சப்பர பவனியின் போது சிறப்பு வான வேடிக்கை, மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வீதி உலா வந்தார்கள்.
இந்த விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இறை அப்பம் வழங்கப்பட்டது. இன்று சிறப்பு ஆராதனையுடன் கொடி இறக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.