ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வரவனி அருகே வ.மஞ்சள்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு பத்ரகாளியம்மன் ஸ்ரீ எழுந்தருள் நாயகி ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ பைரவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து. யாகசாலையில் வைத்து புனித குடங்களில் புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டு. புனித குடங்கள் தலையில் சுமந்து கோவிலை மூன்று முறை வலம் வந்த சிவாச்சாரியார்கள் கோவில் கும்பத்தில் புனித நீரை ஊற்றி மந்திரம் முழங்க சண்டை மேளம் முழங்க கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் அனைவர் மீதும் தெளிக்கப்பட்டனர் இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்
You must be logged in to post a comment.