ராமநாதபுரம் மாவட்டத்தில் புனித தளமாக அறியப்படும் ஏர்வாடி தர்கா அமைந்துள்ள ஏர்வாடி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
அதைத் தொடர்ந்து பொங்கலுக்கு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் எதுவும் முழுமையாக கிராமங்களுக்கு வரவில்லை எனவும் கிராம சபை கூட்டத்தில் கண்டம் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது ஊராட்சி அந்தஸ்து உள்ள நிலையில், அந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அடிப்படை தேவைகள் எதுவுமே நிறைவேற்றப்படாத பட்சத்தில் பேரூராட்சியாக தரம் உயர்த்தினால் தங்களுக்கு வீட்டு வரி உயரும் நூறு நாள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் பேரூராட்சியாக தரம் உயர்த்தி பொதுமக்களுக்கு என்ன நல திட்டங்களை கொண்டு வரப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த பல ஆண்டுகளாகியும், அந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தர்கா பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளின் சுயநலத்திற்காக அங்கே பேருந்துகளை நிறுத்துவதாகவும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் முறையாக வர நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பெண்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேலும், அதிக கிராமப்புறங்களை உள்ளடக்கிய அந்த பகுதிகளை இரண்டு ஊராட்சியாக பிரித்து நிர்வகித்தால் கிராமப்புற மக்கள் பயனடைவார்கள்.எனவே, இதனை கருத்தில் கொண்டு இரண்டு ஊராட்சியாக பிரித்து கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.
You must be logged in to post a comment.