இராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடந்தது. கல்லூரி நிறுவனர் வேலு மனோகரன் தலைமை வகித்தார்.
நேபாள் நாட்டில் 2024 ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை நடந்த டென்னிஸ் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனி நபர் கோப்பை வென்ற ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர் ரக்ஷ்யா தேவி ( சிறந்த பந்து வீச்சாளர்), நவீனா (சிறந்த விக்கெட் கீப்பர்), வினோதினி (தொடர் வீராங்கனை),
கீழக்கரையில் 2024 மார்ச் 2 முதல் மார்ச் 5 வரை நடந்த டென்னிஸ் பந்து 34வது தேசிய கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியில் விளையாடி கோப்பை வென்ற ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர் ரக்ஷியா தேவி, நவீனா, வினோதினி,
கோவா மாநிலத்தில்
2024 மே 20 முதல் மே 23 வரை நடந்த இந்திய சுற்றுலா விளையாட்டு டென்னிஸ் பந்து தேசிய கிரிக்கெட் போட்டியில் விளையாடி கோப்பை வென்ற ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர் வினோதினி, நவீனா, ரக்ஷ்யா தேவி, அழகப்பா பல்கலை அளவிலான பல்வேறு போட்டிகள், கல்லூரி அணிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் வென்ற மாணவியர் 161 பேருக்கு டிஐஜி அபிநவ் குமார், ஜூ-ஜூட்சு உலக சாம்பியன் ஏஞ்சல் சஞ்செஸ் சூரிநோ பரிசு வழங்கினர்.
இணை தாளாளர் வி.எம்.பார்த்தசாரதி, செயலாளர் பி.சகுந்தலா, டிரஸ்டிகள் டாக்டர்கள் எஸ்.முத்துக்குமார், எம்.பத்மாவதி, முதல்வர் ரஜனி மற்றும் பல்வேறு பாடப்பிரிவு துறைத் தலைவர்கள், மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.