ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் நாடார்வலசையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஊருக்குள் செயல்படும் அந்த டாஸ்மாக் மதுபான கடையால் பலரின் குடும்பம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் கோயிலுக்கு செல்வோருக்கும் இடையராக இருந்து வருவதாகவும் இதற்காக ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடத்தியும் மதுபான கடையை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த அதிகாரிகள் இன்று வரை அந்த டாஸ்மாக் மதுபான கடையை அங்கிருந்து அகற்றவில்லை என்றும் தற்போது உடனடியாக அந்த இடத்தில் இருந்து டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் அமைப்பினர் அப்பகுதி பொதுமக்களோடு இணைந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிராக கோசமிட்டு எதிர்ப்பை தெரிவித்து வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
டாஸ்மாக் மதுபான கடையை அங்கிருந்து அகற்றும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.