ராமநாதபுரம் மாவட்டத்தில் முகமது சதக் ஹமிது கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மனையியல் துறை நடத்திய தினை துறையின் தொழில் முனைவோருக்கு தொடக்க வாய்ப்புகள் குறித்த பயிலரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மீரா தலைமை வகித்தார். சென்னை இயற்கை ஆர்வலர், . சீதா லட்சுமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தினை பயன்படுத்தி எவ்வாறு தொழில் செய்வது என்றும் அதன் நுணுக்கங்கள் மற்றும் விதிமுறைகளை எடுத்துரைத்தார். கீழக்கரை, நுகர்வோர் நலச் சங்கம் தலைவர், செய்யது இப்ராஹிம் தொழில் சட்டங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார். மனையியல் துறை தலைவர் நிஷாத் நாஜினி, மற்றும் பாத்திமா, தீபா, உதவி பேராசிரியர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 200 கல்லூரி மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். லதா. செயலாளர் நுகர்வோர் நலச்சங்கம் இராமநாதபுரம் நன்றியுரை வழங்கினார்.

You must be logged in to post a comment.