அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் கண்டித்து பெண் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருங்கவயல் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் சுமார் மூன்று ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அந்த இடத்தை யாரும் ஆrக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டு இருந்த நிலையில் கடந்த காலங்களில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் யாரும் ஆக்கிரமிக்காத அளவில் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது வந்த கிராம நிர்வாக அலுவலர் ராதா, வருவாய் ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் பிரதிபலனை எதிர்பார்த்து அந்த இடத்தில் இதே கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, மலைராஜ் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் ஆரம்பத்திலிருந்து இருந்து பலமுறை கோரிக்கையை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தாசில்தார் அலுவலகத்தை பெண் விவசாயி முற்றுகை இட்டதால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
அதனைத் தொடர்ந்து தொடர்ந்து திருவாடானை தாசில்தாரிடம் புகார் தெரிவித்த நிலையில் தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையில் கலைந்து சென்றனர்.
You must be logged in to post a comment.