இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக மு வீரராகவராவ் இன்று (24/08/2018) மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பற்றிய ஒரு குறிப்பு.
3 தேசிய விருதுகளை குவித்த வீர ராகவராவ்:-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற மு. வீரராகவராவ் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் 3 தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனனவர் ச. நடராஜன் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். மதுரையில் 2016 ஜன., 22ல் மாவட்ட ஆட்சியராக வீர ராகவராவ் பொறுப்பு ஏற்றார். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலீதின் , பிளாஸ்டிக் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என பதவி ஏற்றவுடன் தெரிவித்தார். இதை செயல்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டினார். 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், ‘அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்’ என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்காக மத்திய அரசு தேசிய விருது வழங்கியது. ‘துாய்மை இந்தியா’ திட்டத்தில், மீனாட்சி அம்மன் கோயிலை துாய்மையான இடமாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக ஒரு தேசிய விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தியமைக்காமற்றொரு விருது என விருதுகள் குவித்து முத்திரை பதித்தார்.
மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்., 5ல் தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் அங்கு விரைந்த அவர் அதிகாலை வரை அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். தோப்பூரில் எய்ம்ஸ் (All MS) மருத்துவமனை அமைய தேவையான அடிப்படை வசதிகள் இருக்கிறது என 70 பக்க அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினார். மதுரை மாவட்ட ஆட்சி பர் அலுவலகத்திற்கு ரூ.26 கோடியில் ஒருங்கிணைந்த கட்டடம் கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக இருந்த 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். இவரது முயற்சியால் ஜூலை 2 முதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக், பாலீதின் தடை செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களில் உடனுக்குடன் கையெழுத்திடுவதில்லை’ என சிறிய ஆதங்கம் அலுவலர்கள் மத்தியில் இருந்தாலும் கூட அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் அஅரவணைத்து செயல்பட்டவர். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பணியாற்றி வந்த நிலையில் இராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரைக்கு மாறுதலாகிச் சென்ற முனைவர் ச. நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது சொந்த மாவட்டமாக நினைத்து தான் கடந்த இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினேன். மத்திய, மாநில அரசு திட்டங்களை எவ்வித தொய்வின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. 1652 மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் இருப்பிடம் சென்று விசாரணை நடத்தி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மைய காலி பணியிடங்களுக்கு எவ்வித தலையீடு இன்றி உரிய தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நந்தகுமார் விட்டுச் சென்ற பணிகளை புறக்கணிக்காமல் மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நான் நிறைவேற்றியது போல் இங்கு பொறுப்பேற்கும் மாவட்ட ஆட்சியரும் செயல்படுத்துவார் என்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாலாஜி அங்கு அங்கன்வாடி பணியாளர் காலியிடங்களில் அரசியல் தலையீடுகளை கண்டு கொள்ளாமல் தகுதியானோரை பணி நியமனம் செய்தார். இதில் மற்றொரு மைல் கல்லாக முனைவர் நடராஜனும் இராமநாபுரம் மாவட்டத்தில் காலியாக இருந்த அங்கன்வாடி மையங்களில் பல்வேறு இடையூறுகளை களைந்து தகுதியானோருக்கு வேலை வழங்கி மாவட்ட மக்களின் பாராட்டை பெற்றார்.
வீர ராகவ ராவ் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தொவின்றி கிடைக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் தொடர் முயற்சி எடுக்கப்படும் என்றார்.
புதிய ஆட்சியர் ஒரு குறிப்பு:-
ஆற்றிய பதவிகள்:
~~~~~~~~~~~~~~~~
-உதவி ஆட்சியர் (பயிற்சி), மதுரை.
-சார் ஆட்சியர், சேரன்மகாதேவி, திருநெல்வேலி.
-கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), கடலூர்.
-மாநகராட்சி ஆணையர், திருச்சி மாநகராட்சி.
-திட்ட இயக்குநர், தானே புயல் புனர்வாழ்வு.
-மாவட்ட ஆட்சித் தலைவர், திருவள்ளூர்.
பெற்ற விருதுகள்:
~~~~~~~~~~~~~~~~~
1) மதுரை மாவட்டத்தில், தேர்தலில் சிறந்த முறையில் வாக்காளர்கள் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பிற்கான இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேசிய விருது 25.01.2017 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவரிடமிருந்து பெறப்பட்டது.
2) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறந்த பொது நிர்வாக செயல்பாடு மற்றும் அமைப்புமுறைக்கான சான்று 30.06.2017 அன்று மாண்புமிகு முதலமைச்சரிடமிருந்து பெறப்பட்டது.
3) திருவள்ளூர் மாவட்டத்தில், மக்களவைக்கான பொது தேர்தல் 2014ஐ சிறந்த முறையில் நடத்தியமைக்கும், இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகமாக சேர்த்தமைக்குமான விருது, 25.01.2015 அன்று மேதகு தமிழக ஆளுநரிடமிருந்து பெறப்பட்டது.
4) மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை திருவள்ளூர் மாவட்டத்தில் சிறந்தமுறையில் செயல்படுத்தியமைக்கான தேசிய விருது 02.02.2016 அன்று பெறப்பட்டது.
5) தேசிய அளவில், தூய்மையான வழிபாட்டு தலங்கள் பட்டியலில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு முதலிடம் வழங்கப்பட்டதற்கான விருது 02.10.2017 அன்று பெறப்பட்டது.
6) மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை திறம்பட செயல்படுத்திய மாவட்டமாக மதுரை மாவட்டம் அறிவிக்கப்பட்டு 03.12.2017 அன்று குடியரசுத்தலைவரிடமிருந்து தேசிய விருது பெறப்பட்டது.
கல்வித் தகுதி :
~~~~~~~~~~~~~
இளங்கலை பட்டம் (கணிப்பொறியியல்), முதுகலைப் பட்டம் (பப்ளிக் பாலிசி)
சொந்த ஊர்: குண்டூர் மாவட்டம், ஆந்திரபிரதேசம்.
பொழுதுபோக்கு : சதுரங்கம், கராத்தே(பிளாக் பெல்ட்), சிலம்பம்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









