இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கிய போது கைது !

இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கிய போது கைது ! இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த செரிப்சேட் என்பவருக்கு கூரியூரில் சொந்தமான 8 வீட்டுக்கு வீட்டு மனை காலி இடங்கள் உள்ளது. இந்த இடத்திற்கு வரைபட அனுமதி பெறுவதற்காக இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப் பெருமாளை அணுகியுள்ளார். அதற்கு அவர் 60ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாளிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரித்து வருகிறன்றனர். மேலும் அலுவலக வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்காமல் வாசல் கதவுகள் பூட்டப்பட்டுள்ளது. தற்போது பணியில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஆண் பெண் அலுவலர்கள் இருக்கையை விட்டு எழ வேண்டாம் என லஞ்ச ஓழிப்பு போலிசார் அறிவுறுத்தி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!