இராமநாதபுரம் அதிமுகவில் உட்கட்சி பூசலா?? சலசலப்பை உண்டாக்கும் போஸ்டர் விவகாரம்..

இலங்கை போர் குற்ற விசாரணைக்கு காங்கிரஸ், திமுக கட்சிகளை உட்படுத்தி, தண்டிக்கக் கோரி அதிமுக சார்பில் இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் இன்று (25/09/2018) மாலை பொதுக் கூட்டம் நடக்கவுள்ளது.

இக்கூட்டத்திற்கான அழைப்பிதழில் தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணி கண்டன், கழக அமைப்பு செயலாளர் ராஜ கண்ணப்பன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர் ராஜா எம்பி, தலைமை கழக பேச்சாளர் சிட்கோ சீனு, மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மணிகண்டன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

ஆகையால் இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் ராஜகண்ணப்பன், அன்வர் ராஜா, சிட்கோ சீனு, முனியசாமி, மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோரை வரவேற்று நகர் செயலாளர் அங்குச்சாமி , தனது போட்டோவுடன் நகரின் முக்கிய இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தார். இந்த போர்டுகளில் உள்ள அங்குச்சாமி போட்டோ பிளேடால் கீறப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போர்டுகளில் பிளேடு போடப்பட்டுள்ளது என அங்குச்சாமி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!