இராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராஜசிங்கமங்கலம், மற்றும் திருவாடானை ஆகிய ஆறு (6) ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விவசாயிகளின் விளை பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வாயில் முறையில் (Farm Gate) நேரடியாக வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகள் விளைவித்த விளைபொருளின் தரநிர்ணயம் ஆனது ஒழுங்குமுறை விற்பனைக்கூட தரம்பிரிப்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பகுப்பாய்வு செய்து அதனை e-NAM திட்ட செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களி லிருந்தும் வியாபாரிகள் பார்த்து தேவைப்படும் வணிகர்கள் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதில் போட்டி அடிப்படையில் அதிகப்படியான விலை கோரியவர்களுக்கு விவசாயிகளின் விளைபொருள் அவர்களது சம்மதத்தின் அடிப்படையில் இலாபகரமான விலைக்கு விற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்றுக்கூலி, இறக்குகூலி, வண்டி வாடகை போன்ற எவ்வித கமிஷனும் இன்றி விவசாயிகளின் இருப்பிடம் / பண்ணைவாயில் இடத்திற்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணியாளர்கள்கள் நேரடியாக சென்று அதிகப்படியான இலாபக விலைக்கு விவசாயிகளின் விளைபொருள் விற்றுக் கொடுக்கப் படுவதால் விவசாயிகளும் பயனடைந்து பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.2023-24 -ஆம் ஆண்டில் நாளது தேதிவரை இராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் இராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 214.66 மெ.டன் அளவு ரூ.44,68,824/- மதிப்பிலும், பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 204.79 மெ.டன் அளவு ரூ.51,07,348/- மதிப்பிலும், கமுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 26.5 மெ.டன் அளவு ரூ.10,39,017/- மதிப்பிலும், திருவாடானை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 20.3 மெ.டன் அளவு ரூ.4,11,581/- மதிப்பிலும், இராஜசிங்கமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 144.6 மெ.டன் அளவு ரூ.32,21,494/- மதிப்பிலும் மற்றும் முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின்மூலம் 65.74 மெ.டன் அளவு ரூ.15,80,267/- மதிப்பிலும் ஆக மொத்தம் 676.59 மெ.டன்,158.28 இலட்சம் மதிப்பில் 148 விவசாயிகளுக்கு அவர்களது இருப்பிடம் பண்ணைவாயில் இடத்திற்கே சென்று நெல், மிளகாய்வத்தல், பருத்தி, தேங்காய், சோளம் மற்றும் இதர தானியங்களை தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம்(Farm Gate) மூலம் எவ்வித இடைத்தரகு / கமிஷன் ஏதுமின்றி சரியான எடைக்கு அதிகஇலாபத்திற்கு விற்று கொடுக்கப் பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் வத்தல் பருவகாலம் தொடங்கியிருப்பதால் விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கே நேரடியாக கொண்டு வந்து e-NAM திட்டம் வாயிலாகவும் நேரடியாக வர இயலாத விவசாயிகள் கீழ்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் / மேற்பார்வையாளர்கள் மற்றும் e-NAM திட்ட சந்தை பகுப்பாய்வளார்களை தொடர்பு கொண்டு தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் (Farm Gate) மூலமும் விற்பனை செய்து அதிக இலாபம் பெற்று பயனடைந்திட இராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் பொ.இராஜா தெரிவித்துள்ளார். மேலும் கீழ்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்கள் எண் இராமநாதபுரம்9677844623 , பரமக்குடி 9025806296 ,கமுதி8248865221 ,இராஜசிங்கமங்கலம் 8608392299 , திருவாடானை 9443543211 ,முதுகுளத்தூர் 8056540941 , மற்றும் e-NAM திட்ட சந்தை பகுப்பாய்வளார்கள் அலைபேசி எண்கள்:- இராமநாதபுரம்8940224560 , பரமக்குடி 7305353023 , கமுதி 7904020713 ,இராஜசிங்கமங்கலம் 9790457740 , திருவாடானை 8682841150 ,முதுகுளத்தூர் 6383687185 , ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









