ராமநாதபுரத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் !

இராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உச்சிப்புளி வேளாண்மை துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை / இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பாலாஜி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் மண் வளம் மேம்பாடு பற்றியும் உயிர் உரங்கள் மண்ணில் உயிரியல் செயல்பாடு பற்றியும் இயற்கை வளத்தை தக்க வைத்து பயிர் வறட்சியை தாங்கி வளரும் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றியும் அதன் செயல்படுத்தும் முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் விஜய்குமார் பேசுகையில் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகள் பற்றியும் மண்வளம் பாதுகாப்பு பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் மண் வளம் நீர்வளம் பாதுகாக்கப்பட்டு என்றும் நஞ்சில்லா உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் இயற்கை இடுபொருட்கள் தயாரித்து செலவினம் குறைத்து கூடுதல் வருமானம் ஈட்டும் என்று கூறினார். இப்பயிற்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் மா.பவித்ரன் ஆகியோர் செய்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!