மண்டபம் அரசு மகளிர் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆக. 2) தொடங்கி வைத்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை), முருகேசன் (பரமக்குடி), மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜுன் குமார், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பிரகலாதன், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, துணைத் தலைவர் நம்பு ராஜன் உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டனர். கவுன்சிலர்கள் முபாரக், பூவேந்திரன், சம்பத் ராஜா, முருகானந்தம், சாதிக் பாட்ஷா, முஹமது மீராசாகிப், வாசிம் அக்ரம், மகேஸ்வரி, சீதா லட்சுமி, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி, மண்டபம் நகர் திமுக செயலர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர் உள்பட பலர் பங்கேற்றனர். இம்முகாமில் கலந்து கொண்டோருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் கபிலா முனீஸ்வரன் (பொது மருத்துவம்), அனீஷ் பாத்திமா (குழந்தைகள் நலம்), ஜவஹர் பாரூக் (இருதயம்), அபிராமி (ஆயுர் வேதம்), அஹமது வருசை (கதிரியக்கவியல்), கிஷோர் (நுரையீரல்), சுரேஷ் (தோல்), சுரேஷ் குமார் (அறுவை சிகிச்சை), புவனேஸ்வரி (பல்), ஆனந்த் (கண்), அருண் ராஜ் (காது, மூக்கு, தொண்டை), புவனேஸ்வரி (பல்), தீபிகா ( மன நலம்), அனிதா (இயன்முறை), அருள் மோகன் (எலும்பு), நான்ஸி (மகப்பேறு), அகிலா பாபு (நரம்பியல்) ஆகியோர் சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்கினர். முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் பெற பதிவு செய்யப்பட்டது. ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கு கருப்பை வாய், மார்பக புற்றுநோய் தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் முதல் நிலை பரிசோதனையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டோர் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் சிகிச்சை பெற்றனர். மாற்றத்திறன் பெண் ஒருவருக்கு தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கரு.மகேந்திரன், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் (தொழில்நுட்பம்) மெய்.ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சீனி மரைக்காயர், தியாகராஜன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!