ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அலிகார் சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
இந்த சாலை வழியாக பெத்தாதவன் கோட்டை, நோக்கன்கோட்டை, பெரியார் நகர் இருதயபுரம் போன்ற கிராமங்களுக்கு செல்கின்றனர்.
ஆனால் இச்சாலை மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
அலிகார் சாலை குட்லுர் நகர் அருகில் உள்ள பாலம் முறையாக அமைக்கப்படாமல் மணல்மேடாக இருப்பதால் அப்பகுதி மிகவும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
கண்ணா பெட்டிக்கடை அருகில் ஒரு பள்ளமும், அன்சாரி மளிகை கடை அருகில் இருபுறங்களிலும் பள்ளம் காணப்படுகிறது.
மேலும் தாஹா ஸ்டோர் அருகிலும் உள்ள சாலை சேதமடைந்து மிகவும் குறுகலாக உள்ளது.
100 அடிக்கும் குறைவான அளவில் நான்கு இடங்களில் சாலை சேதம் அடைந்துள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
You must be logged in to post a comment.